ஆன்லைன் மூலம்உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

ஆன்லைன் மூலம்உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
x

ஆன்லைன் மூலம் சேலம் உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலம்

ஆன்லைன் மூலம் சேலம் உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி பேராசிரியர்

சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியாக பணியாற்றி வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் குறைந்த முதலீட்டில் தினமும் ரூ.3 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்று இருந்தது.

இதையடுத்து அவர் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் செலுத்தினார். சில நாட்களுக்கு பிறகு இவருக்கு ரூ.17 ஆயிரம் வந்தது. இதையடுத்து அவர் தவணை முறையில் ரூ.6 லட்சம் முதலீடு செய்தார். அதன்பிறகு குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார்.

போலீசார் விசாரணை

அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் பணம் மோசடி நடந்தது தெரிந்தது. இந்த மோசடி குறித்து அவர் சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story