பெண் என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் மோசடி


பெண் என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் மோசடி
x

ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் என்ஜினீயர்

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண் என்ஜினீயர், சம்பவத்தன்று தனது செல்போனில் வாட்ஸ்-அப் பயன்படுத்தி வந்தார். அப்போது முகம் தெரியாத நபரிடம் இருந்து அவரது எண்ணிற்கு வாட்ஸ்-அப்பில் அழைப்பு வந்தது.ந்த அழைப்பை ஆன் செய்து அந்த பெண் என்ஜினீயர் பேசியபோது மறுமுனையில் பேசிய நபர், ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறியதுடன் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

ஆன்லைன் டாஸ்க்

பின்னர் அந்த நபர், பெண் என்ஜினீயரின் வங்கி கணக்கு எண் விவரங்களை வாங்கி கொண்டார். முகம் தெரியாத அந்த நபரை முழுமையாக நம்பிய அந்த பெண் என்ஜினீயர், அவர் சொல்லியபடி நடந்து கொண்டார்.இதையடுத்து அவரது டெலிகிராம் எண்ணிற்கு அந்த நபர் ஆன்லைன் டாஸ்க் எனக் கூறி ஒரு லிங்க் அனுப்பினார்.

ரூ.10 லட்சம் மோசடி

அந்த பெண் என்ஜினீயர், டாஸ்க்கை வெற்றிகரமாக செய்து முடித்ததால் அவருக்கு ரூ.160 லாபமாக கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் என்ஜினீயரிடம் மீண்டும் அந்த நபர் தொடர்பு கொண்டு முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் செலுத்துமாறு கூறியுள்ளார்.இதனை ஆன்லைனில் செலுத்திய அந்த பெண் என்ஜினீயர் 2-வது தவணையாக மீண்டும் ரூ.10 ஆயிரம் செலுத்தினார். பிறகு 3-வது தவணையாக ரூ.20 ஆயிரம் செலுத்தினார். இதன் மூலம் அவருக்கு லாபமாக ரூ.1600 கிடைத்துள்ளது.இப்படியாக அந்த பெண் தொடர்ந்து பல்வேறு தவணைகளில் ரூ10 லட்சத்து 8 ஆயிரத்து 60 அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு உரிய லாபத்தொகை கிடைக்கவில்லை.

சைபர் கிரைம் போலீசில் புகார்

இது குறித்து அந்த பெண் என்ஜினீயர், டெலிகிராமில் தொடர்பு கொண்டு அந்த மர்ம நபரிடம் கேட்டுள்ளார். மறுமுனையில் பேசியவர் நீங்கள் முழு டாஸ்க்கையும் செய்து முடித்தால் தான் உங்களுக்கான இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறியதோடு மேலும் பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் என்ஜினீயர் இது குறித்து தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story