இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி


இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
x

ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு நெல்லை டவுனில் இந்து முன்னணி சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி

ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நெல்லை டவுன் சந்திப் பிள்ளையார் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநிலச் செயலாளர் குற்றாலநாதன், நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெல்லை மாவட்ட தலைவர் சிவா, செயலாளர்கள் ராஜ செல்வம், சுடலை, செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், விமல், கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி, இந்து வியாபாரிகள் நல சங்க தலைவர் சங்கர், பொருளாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பும், ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story