வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது "மோக்கா"


வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது மோக்கா
x

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மோக்கா உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது. மோக்கா என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்காளதேசம், மியன்மார் அருகே நிலை கொண்டுள்ளது.

மே 14-ம் தேதி வங்காள தேசம் - வடக்கு மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயல் 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Next Story