தண்டுவடம் காயமடைந்தோருக்கு நவீன கழிவறைகள்
தண்டுவடம் காயமடைந்தோருக்கு நவீன கழிவறைகள் கட்டி கொடுக்கப்படும் என கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
தண்டுவடம் காயமடைந்தோருக்கு நவீன கழிவறைகள் கட்டி கொடுக்கப்படும் என கலெக்டர் மேகநாத ரெட்டி கூறினார்.
மருத்துவ முகாம்
விருதுநகர்அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் தண்டுவடம் காயமடைந்தோருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி தலைமை தாங்கினார். கலெக்டர் மேகநாத ரெட்டி முகாமினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தண்டுவடம் காயமடைந்தோருக்கு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி நிர்வாகம் இந்த முகாமை ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியது. தண்டுவடம் காயமடைந்தோருக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை இம் மாதிரியான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்கள் சிகிச்சைக்கு வரும்போது உதவி ஏதும் தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவ கல்லூரி முதல்வரை சந்திக்கலாம். தேவையான உதவிகள் செய்யப்படும்.
உதவித்தொகை
உதவித்தொகை தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகினால் அவர்களுக்கு உதவித்தொகை கிைடக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதியுடன் கூடிய கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தண்டுவடம் காயமடைந்தோருக்கும், நவீன வசதிகளுடன் கழிப்பறை கட்டிக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் விருதுநகர் சுகாதார துறை இயக்குனர் டாக்டர் முருகவேல், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் நிர்வாகிகள் கருணாகரன், சக்தி குமார், ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக முடநீக்கியல்துறை தலைவர் டாக்டர் மகேஸ்வரன் வரவேற்றார். முடிவில் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் சகுந்தலா நன்றி கூறினார். முகாமில் கலந்து கொண்ட தண்டுவடம் காயமடைந்தோக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கையினை கலெக்டர் வழங்கினார்.