நடமாடும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்
ஆரணி நகரில் நடமாடும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமையொட்டி மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆரணி
ஆரணி நகரில் நடமாடும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமையொட்டி மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆரணி நகரில் ஷராப் பஜார் அருகாமையில் வீராசாமி தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17 வயது பள்ளி மாணவன் மர்ம காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இதனையொட்டி அப்பகுதி முழுவதும் ஆரணி நகராட்சி நகராட்சி, எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து வீடு வீடாக சுகாதாரப் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடமாடும் மருத்துவமனை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர்கள் வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல் உள்ளதா உடலில் வேறு ஏதேனும் தொந்தரவு உள்ளதா என கேட்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
அப்போது மருத்துவ குழுவினர்கள், வீடுகளிலும், அக்கம் பக்கத்திலும் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும், பொது மக்களிடத்தில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். லேசான காய்ச்சல் ஏற்பட்டாலும் உடனடியாக ஆரம்ப சுகாதார மருத்துவமனை அல்லது அரசு மருத்துவமனைகளில் சென்று மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.