நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்


நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 July 2023 12:15 AM IST (Updated: 4 July 2023 4:35 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நடமாடும் உணவு பகுப்பாய்வக வாகனத்தை கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தென்காசி

தென்காசி,

தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் நடமாடும் உணவு பகுப்பாய்வகம் என்ற வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கொள்ளப்படும் பரிசோதனை நல்ல சுகாதாரமான சத்தான உணவுகளை உட்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமைகிறது.

இந்த வாகனம் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்ட பயன்பாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதனை தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கொட்டும் மழையில் கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நேற்று முதல் ஒரு மாத காலத்திற்கு தென்காசி மாவட்டத்தில் இந்த வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த வாகனத்தில் உணவு பரிசோதனை முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசி தீபா, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மகாராஜன், செல்வராஜ், முத்துராஜா, நாகசுப்பிரமணியன், முகமது அப்துல் ஹக்கீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story