சங்கரன்கோவிலில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை


சங்கரன்கோவிலில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. ஆலோசனை
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் தினமும் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்குவதற்காக புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் அந்த பணிகளை மெதுவாக செய்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு குடிநீர் முறையாக கிடைக்கவில்லை எனவும் பொதுமக்கள் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜா எம்.எல்.ஏ. நகராட்சி அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது இருதுறை அதிகாரிகளும் இணைந்து மீதமுள்ள புதிய குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கும் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும், நெடுஞ்சாலைத்துறை சாலையில் குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் 20 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் ராஜா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

இந்த கூட்டத்தில், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கனகராஜ், உதவி நிர்வாக பொறியாளர் பிரியதர்ஷினி, சங்கரன்கோவில் நகராட்சி கமிஷனர் சபாநாயகம், நகராட்சி மேற்பார்வையாளர் கோமதிநாயகம், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story