சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர் இன்று ஆலோசனை
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை,
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு சதவீத மின் கட்டணம் மட்டும் உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிறு, குறு நடுத்தர தொழில் துறையினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை கிண்டி சிட்கோ அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆலோசனையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை அமைச்சர் கேட்டறிய உள்ளார். மேலும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.