பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்


பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்
x

திருவரங்குளம் ஒன்றியத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். மேலும் அவர் ரூ.2¼ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளையும் ெதாடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

புதிய மின்மாற்றி

ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்தில் கே.வி.கோட்டை ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சத்தில் புதிய கட்டிடம் மற்றும் ரூ.7 லட்சத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

காயம்பட்டி மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.39 லட்சத்தில் பணிகள், எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.28.50 லட்சத்தில் மாங்னாம்பட்டி முதல் மணியம்பள்ளம் சாலை வழியாக, யாதவர் தெரு, எம்.ஜி.ஆர். நகர் சாலை அடிக்கல் நாட்டு விழா மற்றும் மேலகாயம்பட்டியில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது.

பணிகள் தொடக்க விழா

இதேபோல் திருவரங்குளத்தில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார ஆய்வக புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவும், ரூ.26 லட்சத்தில் வருவாய் அலுவலர் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. மாஞ்சான் விடுதியில் எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் கூழையன்காடு முதல் மரமடக்கி சாலை வழியாக கூலையன் குடியிருப்பு சாலை அடிக்கல் நாட்டு விழாவும், வெண்ணாவல்குடி எம்.ஜி.எம்.எஸ்.டி. திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்தில் ஆலங்குடி-அரிமளம் சாலை முதல் வடக்கு அக்ரஹாரம் சாலை என மொத்தம் ரூ.2 கோடியே 29 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். விழாவில் ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் அரு.வடிவேல், மாவட்ட மகளிர் அணி தலைவரும், மாவட்ட திட்டகுழு உறுப்பினருமான உஷா செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

விலையில்லா சைக்கிள்கள்

தொடர்ந்து திருவரங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி, மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சிகளில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஒன்றிய ஆணையர்கள் ஆயிஷாராணி, கோகுலகிருஷ்ணன், திருவரங்குளம் தலைமை மருத்துவமனை மருத்துவர் ராம்சந்தர், கே.வி. கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மங்க ளம் மெய்யர், காயம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ராமதாஸ், மாஞ்சான்விடுதி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் கண்ணன், வெண்ணாவல்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, வேப்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், ஒன்றிய கவுன்சிலர் பெரியசாமி, வெண்ணாவல்குடி ஊராட்சி துணை தலைவர் வீரமுத்து மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், மேலாண்மை கல்வி குழுவினர், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story