மருத்துவர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகழாரம்..!


மருத்துவர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகழாரம்..!
x

படிக்கும்போதே பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றிய மருத்துவ மாணவர்கள் பாக்கியசாலிகள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

படிக்கும்போதே பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றிய மருத்துவ மாணவர்கள் பாக்கியசாலிகள் என்று மருத்துவர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியின் 79 வது மருத்துவ பட்டப்படிப்பு நிறைவு விழா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்வில் 246 மருத்துவ மாணவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பு நிறைவு சான்றிதழ்களை வழங்கினார். இந்த விழாவில் கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நிகழ்வில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி பெரிய அளவிலான உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் நீங்கள் இந்த மருத்துவமனையில் சேவை செய்யும் வாய்ப்பை பெற்றீர்கள். ஏராளமானோர் உங்கள் மூலம் மருத்துவ சேவையைப் பெற்றனர்.

எனவே படிக்கும்போதே பல ஆயிரம் பேரை காப்பாற்றிய பெருமை உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று என்று கூறினார்.


Next Story