திருச்செந்தூரில் நடந்த விழாவில் ரூ.48 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி.ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


திருச்செந்தூரில் நடந்த விழாவில் ரூ.48 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி.ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
x
தினத்தந்தி 9 Oct 2023 12:15 AM IST (Updated: 9 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் நடந்த விழாவில் ரூ.48 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி.ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் நடந்த விழாவில் ரூ.48 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கட்டிடங்கள் திறப்பு விழா

திருச்செந்தூர் காய்கறி சந்தை வளாகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.48 கோடி மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் திறப்பு விழா, புதிய திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு திட்டவிளக்கவுரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு திருச்செந்தூர் நகராட்சியில் ரூ.3.96 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகராட்சி தினசரி காய்கறி சந்தை கட்டிடம், காயல்பட்டினம் நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, ரூ.1.98 கோடியில் உடன்குடி பேரூராட்சி காய்கறி சந்தை, ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.1.25 கோடியில் காய்கறி சந்தை, சாத்தான்குளத்தில் ரூ.80 லட்சத்தில் காய்கனி சந்தை உள்ளிட்டவைகளை திறந்து வைத்தனர்.

அடிக்கல் நாட்டினர்

மேலும் புதிதாக கட்டபட உள்ள ரூ.1.12 கோடியில் ஏரல் நகர பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், ரூ.5.62 கோடியில் சாத்தான்குளம் பஸ்நிலையத்தை மேம்படுத்துதல், ரூ.10 கோடியில் ஆழ்வார்திருநகரி நகர பஞ்சாயத்தில் அம்ரூத் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும், வீரபாண்டியன்பட்டினம் பாலகண்ணன் மனைவி பேச்சியம்மாளுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் காயல்பட்டினத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவியர் விடுதியில் சமையலராக அரசு பணியிட ஆணையும் வழங்கப்பட்டது.

கோவில் சொத்துக்கள் மீட்பு

விழாவில், கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

திருச்செந்தூர் கோவிலுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்குள்ள அடிப்படை வசதிகள் என்பது சரிவர இல்லாத சூழ்நிலையை நாம் சந்தித்து கொண்டு இருக்கிறோம். இந்த கோவிலை சரிசெய்து பக்தர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக எச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு பணிகளை செய்து வருகிறது. கோவில் நிர்வாகத்தை தி.மு.க. மற்றும் திராவிட இயக்கங்கள் கையகப்படுத்தி கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்வடுவதாக பிம்பத்தை சிலர் கட்டமைத்து வருகின்றனர். இந்த ஆட்சி அனைவருக்குமான ஆட்சி. பெரும்பான்மையான மக்கள் வழிபடும் கோவில்களை அரசு தனது நேரடி பராமரிப்பில் வைத்து நிர்வாகம் செய்வற்கு, அங்கே தொடர்ந்து இருந்த தவறுகள், குழப்பங்கள் தான் காரணம். பா.ஜ.க. கூறுவது போல கோவில்களை தனியார் கையில் கொடுத்தால் அது யார் கையில் செல்லும் என்பது உங்களுக்கு தெரியும். தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு கோவில்களின் சொத்துகளை தனியாரிடம் இருந்து கோடிக்கணக்கில் மீட்கப்பட்டுள்ளது. கோவில்களை பாதுகாக்கும் அரசாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது. கடவுளை வைத்து அரசியல் செய்பவர்களிடம் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதலாவது இடம்

அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் பல்வேறு பணிகளுக்கு ரூ.1,000 கோடிக்கு மேல் முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். திருச்செந்தூர் நகராட்சியில் தற்போது ரூ.17 கோடியில் குடிநீர் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மஞ்சள் நீர்காயலில் இருந்து பைப் லைன் பதிப்பதற்கு தேவையான ரூ.10 கோடியை உடடினயாக நகராட்சி நிர்வாக இயக்குனர் தற்போது ஒதுக்கியுள்ளார். ஜல்ஜீவன் திட்டத்தில் 26-வது இடத்தில் இருந்த தமிழகம், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது முதலாவது இடத்தை பிடித்துள்ளதற்கு முதல்-அமைச்சர் தான் காரணம். எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலெட்சுமி, மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் நாணயம், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், தாசில்தார்கள் வாமனன், கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் கண்மணி, நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்து முகம்மது, நகர பஞ்சாயத்து தலைவர்கள் ஹீமைரா ரமீஷ் பாத்திமா (உடன்குடி), சிநேகவள்ளி (ஸ்ரீவைகுண்டம்), பாக்கியலட்சுமி (சாயர்புரம்), கமாலுதீன் (ஆத்தூர்), சர்மிளாதேவி (ஏரல்), சாரதா பொன் இசக்கி (ஆழ்வார்திருநகரி), ரெஜினி ஸ்டெல்லாபாய் (சாத்தான்குளம்), மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வின், தி.மு.க. வர்த்தக அணி மாநில இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர செயலாளர் வாள்சுடலை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஸ் வீ.ராயன், நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ்கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story