வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார் அமைச்சர் துரைமுருகன்


வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார் அமைச்சர் துரைமுருகன்
x

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில், சுமார் 5 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.

வேலூர்,

நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களில் இன்று (13-ந்தேதி ) முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், 75 வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தனது வீட்டில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில், சுமார் 5 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.


Next Story