சென்னையில் வெள்ளப்பாதிப்பை தடுக்க மினி குளம் - மாநகராட்சி புதிய திட்டம்
சென்னையில் வெள்ளப்பாதிப்பை தடுக்க 10 அடி அழத்தில் மினி குளம் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் மழைக்காலத்தின் போது தெருக்களில் மழைத்தண்ணீர் தேங்கி பொதுமகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தெருக்களில் மழை வெள்ளநீர் தேங்காமல் இருக்க 10 அடி ஆழத்தில் 'மினி' குளம் கட்டப்பட உள்ளது. இதில் நீர் ஊறவைக்கும் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
அதில் மழைநீர் வடிகால்வாய் இணைக்கப்பட உள்ளன. மேலும் சாலை மேற்பரப்பு ஓடையும் இதில் இணைக்கப்படுகிறது இந்த குளங்களைச் சுற்றி தோட்டங்கள், தேவையான விளக்குகள், பெஞ்சு இருக்கைகள் ஆகியவை செய்யப்படுகின்றன.
இவை 47 இடங்களில் கடற்பாசி பூங்கா போல் அமைக்கப்பட் இருக்கிறது. முதற்கட்டமாக 5 இடங்களில் இந்த பூங்கா அமைக்க ரூ. 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story