மினி மாரத்தான் போட்டி
ஸ்ரீவைகுண்டத்தில் மினி மாரத்தான் போட்டி நடந்தது.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் போலீசார் மற்றும் வேளூர் வேலு சமூக நல அறக்கட்டளை இணைந்து மாரத்தான் போட்டிகள் நடத்தியது. ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் போதை தடுப்பு அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்டோர், மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டி நடந்தது. 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பொன்னங்குறிச்சி வரை போட்டி நடந்தது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம், பொன்னங்குறிச்சி, வெள்ளூர் வழியாக புதுக்குடி வரை போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
Related Tags :
Next Story