மினி மாரத்தான் போட்டி
நாசரேத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நாசரேத்:
நாசரேத்தில் சமாரியன் பிட்னஸ் ஜிம் மற்றும் நம்ம நாசரேத் - நல்ல நாசரேத் அமைப்பின் சார்பில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. 6-8, 9-10, 11- 12 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டி நாசரேத் காமராஜர் பஸ்நிலையத்தில் தொடங்கி மர்காசிஸ் கல்லூரி வரை சென்று மீண்டும் பஸ்நிலையம் வந்தடைந்தது. இதில் நாசரேத் மர்காசிஸ் மேல்நிலைப்பள்ளி, தூய யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மூக்குப்பீறி மாற்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் சாலமோன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் 420 பேர் கலந்து கொண்டனர். இதில் முதல் இடங்களை பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பபைகள், சான்றிதழ்கள் மற்றும் ஆறுதல் பரிசுகளை நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) எபநேசர், நாசரேத் நகர தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அதிகாரி ஞானமுத்து, ஆசா மோசஸ், நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன் ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நம்ம நாசரேத் - நல்ல நாசரேத் அமைப்பின் நிர்வாகிகள் விஜய் ஆனந்த், அகிலன், யாபேசு, ஜான், சீலன், லாசர், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் பள்ளிகளின் உடற்பயிற்சி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.