மினி மாரத்தான் போட்டி
மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டி சிங்கம்புணரி யாதவா திருமண மண்டபத்தில் இருந்து தொடங்கி சிங்கம்புணரி என்பீல்டு காலனியில் உள்ள பாரி வள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளி வரை என தூரம் நிர்ணயிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் சிங்கம்புணரி யாதவா பேரவை சங்க தலைவர் செல்வம், துணை தலைவர் சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர். செயலாளர் மாதவன் மற்றும் பொருளாளர் அம்பலத்தரசு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டி நிறைவில் கண்ணமங்கலபட்டியை சேர்ந்த லெனின் முதல் பரிசும், மணப்பட்டியை சேர்ந்த நவீன் 2-ம் பரிசும், காளாப்பூரை சேர்ந்த நவீன் கிஷோர் 3-ம் பரிசும் பெற்றனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கயிறு இழுத்தல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் ரெங்கநாதன் காந்திமதி அறக்கட்டளை சார்பில் கோல்டன் பேலஸ் நிறுவனர் ஆனந்த கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.