பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தெற்கு வள்ளியூர்:

வள்ளியூர் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் முன்பாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாயகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். ஆவின் மற்றும் தனியார் பால் விற்பனை விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை தீவனத்தை மானியத்தில் வழங்க வேண்டும். பால் கொள்முதல் செய்த பணத்தை உற்பத்தியாளர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.2 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால் உற்பத்தியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story