மானாமதுரை பகுதியில் செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்ட ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.


மானாமதுரை பகுதியில் செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்ட ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.
x
தினத்தந்தி 10 March 2023 12:15 AM IST (Updated: 10 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பகுதியில் செங்கல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை பகுதியில் செங்கல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பதிவு பெற்ற 18 செங்கல் தொழிற்சாலைகள் மற்றும் பதிவு செய்யாத செங்கல் தொழிற்சாலைகளும், பல்வேறு இடங்களில் காளவாசல்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.. இந்நிலையில் மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல் தொழிற்சாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுடன் இணைந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வருவதையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.

அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி.

இந்த நிலையில் நேற்று மானாமதுரை பகுதியில் இயங்கி வரும் செங்கல் தொழிற்சாலைகளில் ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மானாமதுரை துணை சூப்பிரண்டு கண்ணன், மானாமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாரிக் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்றனர். அங்கு பணியாற்றி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்த ஆய்வின் போது செங்கல் காளவாசல் உரிமையாளர்கள் பி.ஜி சேம்பர் துபாய்காந்தி, ஏ.ஆர்.பி சேம்பர் ராம்விக்னேஷ், அருணாச்சி அம்மன் பிரிக்ஸ் நாகராஜ் சண்முக சுந்தரம், எஸ்.பி.சி சேம்பர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வைப்பதில் சிரமம்

மேலும் டி.ஐ.ஜி. துரை செங்கல் உரிமையாளர்களிடம் இங்கு தங்கியிருந்து பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சார்பில் எங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் எங்களது குழந்தைகளை இங்குள்ள பள்ளியில் படிக்க வைக்க வைப்பதில் தான் சிரமம் உள்ளது என கூறினர். இதையடுத்து டி.ஐ.ஜி. அந்த தொழிலாளர்களின் குழந்தைகளிடம் இந்தி மொழியில் பேசி படிப்பதன் அவசியத்தை கூறி அறிவுரைகளை வழங்கினார்.


Next Story