மிக்ஜம் புயல் நிவாரண பணிகள்.. அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!


மிக்ஜம் புயல் நிவாரண பணிகள்.. அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை..!
x

கோப்புப்படம்

மிக்ஜம் புயல் நிவாரண பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போதுவரை வெள்ளம் வடியவில்லை. மேலும் பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் புயல் நிவாரணத்திற்கு நிதி அளித்திடுமாறு முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மிக்ஜம் புயல் நிவாரண பணிகள் தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன்,கே.என்.நேரு, கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் நிவாரண பணிகள் மற்றும் தீவிரப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், நிவாரண நிதி குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story