எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிப்பு
எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நினைவு தினம்
சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி, சேரன்மாதேவி அருகே கூனியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிசெல்வம், பணிமனை செயலாளர் நம்பிராஜன், மத்திய சங்க செயலாளர் முருகேசபெருமாள், தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு சேரன்மாதேவி நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் தலைமையிலான அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரன்மாதேவி முன்னாள் பேரூராட்சி தலைவர் இசக்கி பாண்டியன், ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், துணைத்தலைவர் மாரிமுத்து, நிர்வாகி உச்சிமாகாளி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகநயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முக்கூடல்
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி, முக்கூடல் பேரூர் கழகத்தின் சார்பில், முக்கூடல் பழைய ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.