மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
சேலம்
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் (14-ந் தேதி) அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 526 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இந்த மழை தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் தீவிரமடைந்தது இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 996 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 112.11 அடியாக இருந்தது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
Related Tags :
Next Story