தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு


தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை கிளை அமைந்துள்ளது. இந்த பணிமனையில் தி.மு.க. தொழிற்சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக 4 பேரை நியமனம் செய்து, பணிமனை வாயில் பகுதியில் உள்ள பெயர் பலகையிலும் அது குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள் தன்னிச்சையாக செயல்பட்டு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததாக கூறியும், பெயர் பலகையில் புதிய நிர்வாகிகள் பெயரை அகற்ற வலியுறுத்தியும் சங்க உறுப்பினர்கள் பணிமனையில் வைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் காரசாரமாக பேசிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே கிளை மேலாளர் சீனிவாசன், இங்கு பணி நேரத்தில் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறி அனைவரையும் அங்கிருந்து வெளியேற செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய சங்க துணை செயலாளர் சண்முகம் செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story