மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்


மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்
x

சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த மேல்நரியப்பனூர் கிராமத்தில் நூற்றாண்டு விழா கண்ட கம்பீரமான தோற்றத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இவ்வாண்டுக்கான 116-ம் ஆண்டு திருவிழா நேற்று இரவு 7 மணிக்கு 70 அடி கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகள் நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான 12-ம் தேதி இரவு திருத்தேர் பவனியும், 13-ம் தேதி இரசு பெருவிழா திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story