ஓய்வூதியர் சங்க கூட்டம்


ஓய்வூதியர் சங்க கூட்டம்
x

குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க கூட்டம்

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட அளவிலான தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள் சங்க நெல்லை கிளை 9-வது பேரவை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. நெல்லை கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொது செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பிரைட் செல்வின் வரவேற்றார். செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கையும், பொருளாளர் ஹரிதாஸ் நிதி நிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் இலவச கண் பரிசோதனை முகாம், சர்க்கரை நோய் கண்டறிதல் முகாமும் நடந்தது.


Next Story