பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்


பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2023 1:00 AM IST (Updated: 16 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். ஓசூர் அருகே பட்டாசு ஆலையை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு கடை கோர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஓசூரில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. பட்டாசு கடைகளில் 18 வயதிற்கு கீழ் யாரையும் வேலைக்கு அமர்த்தக்கூடாது. தொழிலாளர்கள் குறித்த விவரங்களை முழுமையாக சேகரித்து தினமும் வருகை பதிவேட்டை பின்பற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் செலுத்த வேண்டும். பட்டாசு கடைகளில் 2 கதவுகள் திறந்த நிலையிலும், தீயை அணைக்க மணல், வாளிகள் இருப்பது அவசியம் என தாசில்தார் அறிவுறுத்தினார். இதில் 70 பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story