நாகூரில் மீலாது விழா ஊர்வலம்
நாகூரில் மீலாது விழா ஊர்வலம்
நாகூரில் மீலாது விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
மீலாது விழா ஊர்வலம்
நபிகள்நாயகம் பிறந்தநாள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் நாகூரில் மீலாது விழாவையொட்டி இஸ்லாமிய அரபி பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. தர்கா உட்புறத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நூல் கடைத்தெரு, மெய்தீன் பள்ளி தெரு, யூசுப் நெய்னா தெரு, தர்காகுளம் தெரு, ஜடையினா ஹாஜியார்தெரு, தெற்குதெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது அனைத்து தெருக்களிலும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூக்கள் தூவி ஊர்வலத்தை வரவேற்றனர்.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் மஸ்ஜித் அல் ஹிதாயா பள்ளிவாசல் சார்பில் தலைவர் ஹாஜி தமிமுல்அன்சாரி தலைமையிலும், செயலாளர் சஹ்பானுதீன் முன்னிலையிலும் நபிகள் பிறந்தநாள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஹிதாயா மதரசாவில் பயிலும் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.