டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மருந்து கடைக்கு 'சீல்'


டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மருந்து கடைக்கு சீல்
x

டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்ற மருந்து கடைக்கு ‘சீல்’

ஈரோடு

வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகளை போதைக்காக தவறாக பயன்படுத்துவது குறித்த புகார் தொடர்பாக, ஈரோடு மாவட்ட மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் நேற்று அதிரடியாக பல்வேறு மருந்து கடைகளில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, ஈரோடு பவானி ரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு மருந்து கடையில் கொள்முதல் மற்றும் விற்பனை ரசீதுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது குறிப்பிட்ட வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் கொள்முதல் செய்து உள்ளதுடன், டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும், விற்பனை ரசீதுகள் இல்லாமலும் அதை விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டப்படி அந்த மருந்து கடைக்கு மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மருந்து கடையின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story