செயற்கை கால் வழங்க மருத்துவ அளவீட்டு முகாம்


செயற்கை கால் வழங்க மருத்துவ அளவீட்டு முகாம்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:30 AM IST (Updated: 19 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் செயற்கை கால் வழங்க மருத்துவ அளவீட்டு முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் கால்களை இழந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் வகையில், சென்னையை சேர்ந்த தன்னார்வ நிறுவனம் மூலம் மருத்துவ அளவீட்டு முகாம், தேனி கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம். தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story