இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள்


இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள்
x

பெரம்பலூர்-வேப்பந்தட்டை வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளன. அதன்படி பெரம்பலூர் வட்டாரத்திற்கு வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இன்றும் (வெள்ளிக்கிழமை), பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வருகிற 19-ந்தேதியும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20-ந்தேதியும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21-ந்தேதியும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெற உள்ளன. வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22-ந்தேதியும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-ந்தேதியும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந்தேதியும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந்தேதியும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந்தேதியும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந்தேதியும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையில் நடைபெற உள்ளன. எனவே முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story