மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:45 AM IST (Updated: 19 Jan 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நாளை நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாமினையும், அவர்களுக்கு உபகரணங்கள் தேர்வு செய்வதற்கான முகாமினையும் நடத்துகிறது. அதன் விவரம் வருமாறு:- பெரம்பலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் தாலுகாவிற்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந்தேதி பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் தாலுகாவிற்கு வருகிற 7-ந்தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை தாலுகாவிற்கு வருகிற 10-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் சிறப்பு மருத்துவர்களான கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், ஆர்.பி.எஸ்.கே. மருத்துவர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை புதுப்பித்தல், யு.டி.ஐ.டி. கார்டு பதிவு செய்தல், உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மூலம் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யவுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்-6 மற்றும் தேசிய அடையாள அட்டை புதுப்பித்து கொள்பவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story