மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
பழனியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
திண்டுக்கல்
பழனி வட்டார வள மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் பழனி நகராட்சி பள்ளியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்ட உதவி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், துணை தாசில்தார் நந்தகோபால், வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, அரசின் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் ஆகியவையும் பெறப்பட்டது. முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் காளிமுத்து நன்றி கூறினார்.
Related Tags :
Next Story