கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவாரூர்
கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் ராமலிங்கம், உதவி இயக்குனர் சபாபதி ஆகியோரின் உத்தரவின்படி நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மகிழஞ்சேரி கால்நடை டாக்டர்கள் ஜனனி, முல்லைவேந்தன், தனலெட்சுமி, திருமூர்த்தி ஆகியோர் கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கருவூட்டல், குடற்புழுநீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர். இதில் அனைத்து கால்நடைகளுக்கும் தாது உப்பு கலவைமருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முன்னதாக கால்நடை நோய் புலனாய்வு உதவி இயக்குனர் சுவாமிநாதன் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
Related Tags :
Next Story