மோட்டார் சைக்கிள்கள் மோதி மெக்கானிக் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதி மெக்கானிக் பலி
x
தினத்தந்தி 29 Aug 2023 1:45 AM IST (Updated: 29 Aug 2023 1:46 AM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மெக்கானிக் பலியானார்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 18). இவர் அதே பகுதியில் ேமாட்டார் சைக்கிள் பழுது நீக்கும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர், சித்தரேவு கிராமத்துக்கு சென்ற தனது தாய் ஜெயராணியை அழைத்து வருவதற்காக பட்டிவீரன்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சித்தரேவு நோக்கி சென்றார். அப்போது அய்யம்பாளையம்-பட்டிவீரன்பட்டி மெயின்ேராட்டில் துணை மின்நிலையம் அருகே எதிரே அய்யங்கோட்டையை சேர்ந்த முருகன் (38) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், செல்வகுமாரின் மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செல்வகுமாரையும், முருகனையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். முருகன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story