விளை நிலங்களை காட்டெருமைகள் சேதப்படுத்துவதை தடுக்க கோரிக்கை
விளை நிலங்களை காட்டெருமைகள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சி
மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சி வனத்துறை பகுதிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வடுகபட்டியில் நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விவசாயிகள், காட்டெருமைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழிப்பதுடன், விளை நிலங்களையும் சேதப்படுத்துவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே காட்டெருமைகள் விளை நிலங்களுக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனபகுதியில் வனவிலங்குகள் நீர் அருந்திட வசதியாக அதிக தண்ணீர் தொட்டி கட்ட வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தனர். இதேபோல் குரங்கு, மயில், கிளி ஆகியவற்றாலும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story