கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை


கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை
x

கொள்ளிடம் ஆற்றங்கரையில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியம் விரகாலூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அங்கிருந்த மின்கம்பத்தின் கீழ் பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இடியும் நிலையில் இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் சூசைஅந்தோணி கரையை சரி செய்ய கோரிக்கை விடுத்தார். அதன் பேரில் புள்ளம்பாடி மின்வாரிய அலுவலர் முருகேசன் அறிவுறுத்தலின்பேரில் மின் ஊழியர்கள் சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்தனர். மேலும் பொதுப்பணித்துறையினர் ஆற்றங்கரையில் கூடுதல் மண் அரிப்பு ஏற்படாத வண்ணம் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்தனர்.


Next Story