கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகா மிற்கு கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் லில்லி அருள்குமாரி தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் நொய்யல் கால்நடை மருந்தக மருத்துவர் டாக்டர் உஷா தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, சுமார் 500-க்கும் மேற்பட்ட பசு மாடு, எருமை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். பின்னர் விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை எப்படி தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில் குளத்துப்பாளையம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன் அடைந்தனர். இதேபோல் குந்தாணிபாளையம், நத்தமேடு, சேமங்கி, நாடார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.