ஆய்வுக்கு சென்ற இடத்தில் பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய மேயர், கமிஷனர்


ஆய்வுக்கு சென்ற இடத்தில் பள்ளி குழந்தைகளுடன் உணவருந்திய மேயர், கமிஷனர்
x

மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தினர்.

மதுரை


மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆய்வுக்கு சென்ற மேயர் இந்திராணி, கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்தினர்.

காலை உணவு

தமிழகத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி மதுரை மாநகராட்சியில் உள்ள 26 தொடக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 73 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 511 மாணவர்கள் காலை உணவு அருந்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் ஆகியோர் நேற்று சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள், பள்ளி குழந்தைகளிடம் காலை உணவின் சுவை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தாங்களும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கும் தட்டுகள் வழங்கப்பட்டன. அதனை பெற்று கொண்ட மேயர், கமிஷனர் மற்றும் மண்டல தலைவர் சரவணபுவனேசுவரி ஆகியோர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

மதுரைக்கு சிறப்பு

இது குறித்து மேயர் இந்திராணி கூறியதாவது:- முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், இந்தியாவிற்கே ஒரு முன்னோடி திட்டமாகும். இந்த திட்டத்தை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளன்று தொடங்கி வைத்தார். இது மதுரைக்கு கிடைத்த சிறப்பு.

இந்த திட்டத்தால் மதுரை மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது. மாணவர்கள் ஊட்டச்சத்து குறைப்பாடு இல்லாமல் இருப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது. மதுரை மாநகராட்சி்யில் இந்த திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக நானும், மாநகராட்சி கமிஷனரும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story