மாயாண்டி கோவில் திருவிழா


மாயாண்டி கோவில் திருவிழா
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி கோவில் திருவிழா நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் மாயாண்டி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புனிதநீர் கொண்டு வருதல், 11 மணிக்கு உச்சிகால பூஜை, மதியம் 12 மணிக்கு சாமி வேட்டைக்கு செல்லுதல், 3 மணிக்கு பொங்கலிடுதல், 4 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் கிடா வெட்டுதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழாவில் பெத்தநாடார்பட்டி, மகிழ்வண்ணநாதபுரம், சாலைப்புதூர், சுந்தரலிங்கபுரம், சண்முகபுரம், இலங்காபுரிபட்டணம், பூபாலசமுத்திரம், நவநீதகிருஷ்ணபுரம், கிருஷ்ணப்பேரி, சிவகாமிபுரம், பூலாங்குளம், கரிசலூர் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இரவில் இன்னிசை கச்சேரி, நகைச்சுவை பட்டிமன்றம், மேட் கபடி விளையாட்டு போட்டி நடந்தது. இன்று (சனிக்கிழமை) பெண்கள் கபடி மற்றும் ஆண்கள் கபடி போட்டியும் நடைபெறுகிறது.


Next Story