மே தின பொதுக்கூட்டம்
சிவகிரியில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது.
சிவகிரி:
இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) சிவகிரி நகர கிளையின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் சிவகிரியில் நடந்தது. வாசுதேவநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர் தலைமலை முன்னிலை வகித்தார். அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் வாசுதேவநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் சண்முகசுந்தரம் என்ற பழனி வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட செயலாளர் அய்யப்பன், சிவகிரி நகர செயலாளர் குருசாமி, அகில இந்திய தொழிற்சங்க கவுன்சில் மாவட்ட செயலாளர் வேல்முருகன், அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழக மாவட்ட செயலாளர் பிச்சைமணி உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தை சிவகிரி பேரூராட்சியிலும் அமல்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரி பேரூராட்சியில் எடுக்கப்பட்ட வறுமைக்கோட்டு பட்டியலை ரத்து செய்துவிட்டு புதிய பட்டியல் வெளியிட வேண்டும். சிவகிரி தாலுகா அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.