கந்துவட்டி கொடுமை தொடர்பாக மாதர் சங்கத்தினர் புகார்


கந்துவட்டி கொடுமை தொடர்பாக மாதர் சங்கத்தினர் புகார்
x

கந்துவட்டி கொடுமை தொடர்பாக மாதர் சங்கத்தினர் புகார் கொடுத்தனர்.

புதுக்கோட்டை

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் பாண்டி செல்வி, செயலாளர் சுசிலா உள்பட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், ஆலங்குடி தாலுகா, வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலத்தோப்பு கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடும்பங்களிடம் தனியார் நுண்நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளனர். மாத மற்றும் வாரத் தவணைகளில் கடனை திருப்ப செலுத்தி வந்துள்ளனர். தவணை கட்ட தவறியவர்களிடம் வேறு ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து கூடுதலாக அவர்களாகவே கடனை பெற்றுக்கொடுத்து இவர்களுக்கான தொகையை வரவு வைத்துள்ளனர். இதனால் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதனால் கடன் தொகையை கட்ட முடியாதவர்களிடம் அநாகரிமான முறையில் நடந்து கொள்வதாகவும், மிரட்டல்களிலும் நுண் நிதி நிறுவனத்தினர் ஈடுபடுகின்றனர். கந்து வட்டி கொடுமையை தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Next Story