மாதா ஆலய தேர் பவனி


மாதா ஆலய தேர் பவனி
x

விளாத்திகுளம் அருகே புனித மோட்ச இராக்கினி மாதா ஆலய தேர் பவனி

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் கிராமத்தில் பழமை வாய்ந்த "புனித மோட்ச இராக்கினி மாதா ஆலயம்" என்ற புகழ்பெற்ற திருத்தலம் உள்ளது. இந்த ஆலய பெருவிழாவை முன்னிட்டு கடந்த 6-ந் தேதி ஆலயத்தில் உள்ள அன்னைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றம்‌ நடந்தது.

திருவிழாவின் ஒவ்வொரு நாளும் திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள், அன்னைக்கு உயர் வணக்கம் மற்றும் மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. 10-ம் நாளன்று அன்னையின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரினை பின்தொடர்ந்து வீதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் விழுந்து வணங்கி "கும்புடுசரணம்" போட்டுக்கொண்டே ஆலயம் வரை சென்று தங்களது நேர்த்திக்கடன்களை முடித்தனர்.

பின்னர், சிறப்பு அசன விருந்து வழங்கப்பட்டது.


Next Story