அம்மன் கோவிலில் மாசித்திருவிழா


அம்மன் கோவிலில் மாசித்திருவிழா
x

அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டியில் உள்ள கன்னிசேரி காட்டு பத்திரகாளி அம்மன் கோவிலில் மாசி திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், நெய், தேன், சந்தனம், குங்குமம் உள்பட 16 வகையான ெபாருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நள்ளிரவு கருப்பசாமி வேடமணிந்து பாரிவேட்டை செல்லும் நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடந்தது. 2-வது நாளில் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அக்னி சட்டி எடுத்து வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story