தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
கருங்கல் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள ஆலஞ்சி சரல்விளையைச் சேர்ந்தவர் தங்கநாடார். இவருடைய மகன் ஜெகன்பிரபு (வயது38), கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஜெகன் பிரபுவின் ஏற்கனவே பெற்றோர் இறந்து விட்டதால், அவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். மேலும், இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஜெகன்பிரபுவின் வீட்டு பூட்டியே கிடந்தது.
இந்தநிலையில் நேற்று காலையில் ஜெகன்பிரபுவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தனர். அப்போது, அங்குஜெகன்பிரபு தூக்கில் பிணமாக தொங்குவதையும், அவரது உடல் அழுகிய நிலையில் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஜெகன் பிரபு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும், அவர் தற்கொலை செய்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனதால், உடல் அழுகிய நிலையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.