மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
புளியங்குடியில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியானார்.
புளியங்குடி:
புளியங்குடி ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் முகம்மது உசேன் (வயது 40), கொத்தனார். புளியங்குடி லெப்பை சாஹிப் புரம் வடக்கு தெருவில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் காங்கிரீட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில் முகமது உசேன் காங்கிரீட் போடும் பணிக்காக அதற்குரிய உபகரணங்களை விஞ்ச் மூலம் மேலே எடுத்து சென்றார். அப்போது, தெருவில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில், சென்ட்ரிங் கம்பி பட்டு எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முகம்மது உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் புளியங்குடி போலீசார் விரைந்து சென்று, முகம்மது உசேன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.