கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
இரணியல் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மது குடித்ததை மனைவி கண்டித்ததால் இந்த விபரீத முடிவை அவர் தேடி கொண்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மது குடித்ததை மனைவி கண்டித்ததால் இந்த விபரீத முடிவை அவர் தேடி கொண்டார்.
கொத்தனார் தற்கொலை
இரணியல் அருகே குருந்தன்கோடு ஆலன்விளையை சேர்ந்தவர் ஜோசப்ராஜ் (வயது 53), ெகாத்தனார். இவருக்கு மேரிபாய் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஜோசப்ராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மது குடிப்பதையும், வேலைக்கு செல்லாததையும் மேரிபாய் கண்டித்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டு உத்திரத்தில் நைலான் கயிறு மூலம் ஜோசப்ராஜ் தூக்கு மாட்டி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இதை பார்த்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு ஜோசப்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் விசாரணை
இதுபற்றி மேரிபாய் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் கொத்தனார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.