கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x

கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியை அடுத்த தெற்கு குண்டல் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). கொத்தனாரான இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருடைய மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து தன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story