கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
கண்பார்வை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
கண்பார்வை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் வடக்குதெருவை சேர்ந்தவர் பவுல் (வயது 52), கொத்தனார். இவருடைய மனைவி ஜெயமதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பவுல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை செய்யும்போது சிமெண்ட் கண்களில் பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் தனக்கு கண்பார்வை பாதிக்கப்படுமோ? என்ற அச்சத்திலும், மனவேதனையிலும் இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் மனைவியிடம் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவர் அப்பகுதியில் உள்ள 4 வழிச்சாலையோரம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீதா, பிரான்சிஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தூக்கில் தொங்கிய பவுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.