கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை


கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை
x

அருமனையில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அருமனை:

அருமனையில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

அருமனை பனங்கரை பகுதியைச் சேர்ந்தவர் பிரதீஷ் (வயது 45), கொத்தனார். இவருக்கு பிந்து என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பிரதீசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. நேற்று மதியம் பிரதீஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அருமனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிரதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story