தாடிக்கொம்புவில் கொத்தனார் தற்கொலை


தாடிக்கொம்புவில் கொத்தனார் தற்கொலை
x

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்புவில் கொத்தனார் தற்கொலை செய்தார்.

திண்டுக்கல்

தாடிக்கொம்பு அருகே உள்ள கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 41). கொத்தனார். இவருக்கு கடன்தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story